இந்நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு ஊரக வளர்ச்சி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.

மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கும்பாரஅள்ளி ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி (SCPAR-2020-2021) திட்டத்தின் கீழ் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடம் மற்றும் உணவருந்தும் கூடக் கட்டடங்களையும், பொம்மஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (MGNREGS-2020-2021) திட்டத்தின் கீழ் ரூ.24.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தினையும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் ஜெர்தலாவ் ஊராட்சியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் குழாயிலிருந்து எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் வழங்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் என மொத்தம் ரூ.114.77 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார்கள்.
மேலும், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், கும்மனூர் ஊராட்சி, ராசிக்குட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் கும்மனூர் ஊராட்சி, ராசிக்குட்டை, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜக்கசமுத்திரம் ஊராட்சி, பாறைக்கொட்டை மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், சுஞ்சல்நத்தம் ஊராட்சி, தின்னபெல்லூர் ஆகிய 3 இடங்களில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 புதிய கால்நடை மருந்தக கட்டடங்களை திறந்து வைத்தார்கள்.
இதனை தொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மாரண்டஅள்ளி பேரூராட்சி, பேருந்து நிலையம் அருகில் நபார்டு (RIDF-XXVI-2020-2021) திட்டத்தின் கீழ் ரூ.38.00 இலட்சம் மதிப்பீட்டிலும், தருமபுரி மாவட்டம், புலிக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலக்கோடு வட்டம், புலிக்கரை மற்றும் தருமபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.38.00 இலட்சம் வீதம் ரூ.76.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 3 இடங்களில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்கள்.
மேலும், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அண்ணாமலை அள்ளி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மாவட்ட ஊராட்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 இலட்சம் மதிப்பீட்டில் மங்கம்மாள் வீடு முதல் மகேஸ்வரி வீடு வரை புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், பேரூராட்சிகள் துறையின் சார்பில் காரிமங்கலம் பேரூராட்சி, 10-வது வார்டிற்குட்பட்ட காந்தி பூங்காவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (2022-2023) கீழ் ரூ.32.00 இலட்சம் மதிப்பீட்டில் காந்தி சிறுவர் பூங்கா அமைக்கும் பணியினையும் மற்றும் பாலக்கோடு பேரூராட்சி, 6- வது வார்டிற்குட்பட்ட மைதீன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளையும் என மொத்தம் ரூ.89.43 இலட்சம் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 9 புதிய கட்டங்களை திறந்து வைத்து, வளரச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் பேரூராட்சிகள் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.89.43 மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி. வெ. தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., முன்னாள் அமைச்சர் முனைவர். பி. பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, காரிமங்கலம் தேர்வு நிலைப் பேரூராட்சி தலைவர் திரு.பி.சி.ஆர்.மனோகரன், பாலக்கோடு தேர்வு நிலைப் பேரூராட்சி தலைவர் திரு. பி.கே.முரளி, துணைத் தலைவர்கள் திரு. கே.வி.கே.சீனிவாசன் (காரிமங்கலம்), திருமதி.இ.தாஹசீனா (பாலக்கோடு), பொம்மஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. வே. தீர்த்தகிரி, கும்பாரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.தி.கௌரி, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ஆர்.சுவாமிநாதன், தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.கே.மாலினி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.ரா.குருராஜன், பாலக்கோடு வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜசேகர், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பெ.கிருஷ்ணன், திரு.கலைவாணி, காரிமங்கலம் தேர்வு நிலைப் பேரூராட்சி செயல் அலுவலர் அ. ஆயிஷா, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுருளிநாதன், பாலக்கோடு தேர்வு நிலைப் பேரூராட்சி செயல் அலுவலர் சு. டார்த்தி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக