Type Here to Get Search Results !

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஈ.அக்ரஹாரம்  கிராமத்தில் பாரத ரத்னா ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றும் குழந்தைகள் தினம்  கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகள் நேரு எழுதிய  கவிதைகளை ஒப்புவித்து "செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும் குழந்தையின் "புன்னகை அழகு" என்ற கவிதைகளை அனைத்து குழந்தைகளும் ஒப்புவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இல்லம் தேடி கல்வியில் பயிலும் ஏழை எளிய  மாணவ மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடிய கல்வியின் ஆசிரியர்கள்  சந்திரலேகா, மோனிகா, மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பாக நா.சின்னமணிஊர் பொதுமக்கள் மற்றும்  20 மேற்பட்ட மாணவி மாணவிகள்இதில்  கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies