உதயநிதி நடித்த கலகத்தலைவன் படம் ரிலீஸ் - ரசிகர்கள் ஆரவாரம் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

உதயநிதி நடித்த கலகத்தலைவன் படம் ரிலீஸ் - ரசிகர்கள் ஆரவாரம் .

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சரவணா திரையரங்கில்  உதயநிதி நடிந்த கழகத் தலைவன் படத்தின் முதல் காட்சிக்கு உதயநிதி ஒன்றிய தலைமை ரசிகர் மன்றத்தினர்.  இலவச டிக்கெட் மற்றும் இனிப்புக்கள் ரசிகர்களுக்கு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்.


உதயநிதி நடித்த கழகத தலைவன் படம் நேற்று நவம்பர் 18 அன்று   மாநிலம் முழுவதும் திரையிடபட்டது. அதனை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்களும் திமுகவினரும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று பாலக்கோடு  சரவணா திரையரங்கில் முதல் காட்சிக்கு பாலக்கோடு ஒன்றிய தலைமை உதயநிதி ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் பி.என்.பி வெங்கடேசன் தலைமையில் ரசிகர்கள் தாரை தப்பட்டை அடித்தும், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.


இதில் சிறப்பு அழைப்பாளர்கள் பாலக்கோடு நகர கழக செயலாளர் பி.கே.முரளி, பி.எல்.ஆர்.ரவி, ஜெயந்திமோகன், மோகன்  கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்ச்சியில் ரசிகர்மன்ற ஒன்றிய பிரதிநிதி அன்வர் பாஷா, ஆசிப், கருணாநிதி, காட்டு ராஜா, அப்பாதுரை, பெரியசாமி, பசீர், ஆனந்தன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு முதல் காட்சிக்கான இலவச டிக்கட்டுக்களை வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad