மை தருமபுரி அமைப்பினர் பல்வேறு சமூகசேவைகளை தருமபுரியில் செய்து வருகின்றனர், குறிப்பாக உணவு வழங்குதல், ரத்ததானம், குழந்தைகள் காப்பகம், மனநல காப்பகம், முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்குதல், மளிகை பொருட்கள் வழங்குதல், மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுதல் போன்ற பல சேவைகளை செய்து வருகின்றனர்.
(13.11.2022) இன்று உலக கருணை தினத்தில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக சாலையோரம் வீடற்றோர், ஆதரவற்று படுத்துறங்கும் முதியவர்களுக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக போர்வைகள் வழங்கப்பட்டது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனர் சதிஷ் குமார் கூறுகையில், "மை தருமபுரி அமைப்பு இருக்கும் வரை இங்கு ஆதரவற்றவர்கள். அனாதைகள் என்று யாரும் இல்லை என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மை தருமபுரி தன்னார்வலர்கள் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார், தன்னார்வலர்கள் தமிழ்செல்வன், அருணாச்சலம், ராகவன், அஜய், தாரணி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக