தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள புதூர் சோழப்பாடியில் தமிழ் சேனை முத்தமிழ் சங்கமம் அறக்கட்டளை சார்பில் 100 மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஏரியூர் அருகே உள்ள புதூர் சோழப்பாடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமை ஆசிரியர் புஷ்பா வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமை ஆசிரியர் பழனியப்பன் தலைமை தாங்கினார், உள்ளூர் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர், தமிழ் ஆசிரியர் S.S.சாமி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மா.நரசிம்மகுமார் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மா பழனி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து மாணவ மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகம் தமிழ் சேனை முத்தமிழ் சங்கமம் அறக்கட்டளை சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் சேனை அறக்கட்டளையின் செயலாளர் நா.நாகராஜ் மேற்கொண்டார்
நிகழ்வில் இந்த பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக