இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழு உறுப்பினர்களான வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.கே. அமுல் கந்தசாமி அவர்கள், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு.பெ. கிரி அவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. கோவிந்தசாமி அவர்கள், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். சந்திரன் அவர்கள், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. செந்தில் குமார் அவர்கள், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எ.எம்.வி. பிரபாகர ராஜா அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தே. மதியழகன் அவர்கள், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. சா. மாங்குடி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன் அவர்கள், அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மாண்புமிகு மனுக்கள் குழுவின் தலைவர் / அரசு தலைமைக் கொறடா / திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர். கோவி. செழியன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவிற்கு, தருமபுரி மாவட்டத்திலிருந்து ஏற்கனவே வரப்பெற்ற 108 மனுக்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை குழுவினர் மூலம் தேர்வு செய்யப்பட்ட 78 மனுக்கள் மற்றும் கடந்த 2018-2019ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு மூலமாக பெறப்பட்ட 14 மனுக்கள் மீது மனுதாரர்கள் முன்னிலையில் ஒவ்வொரு மனுவாக இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மாண்புமிகு மனுக்கள் குழுவின் தலைவர் / அரசு தலைமைக் கொறடா / திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர். கோவி. செழியன் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: தமிழக மக்களின் நலனிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகவே. மக்களைத் தேடி திட்டங்களின் பயன்கள் சென்று சேர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வு உயர்ந்திட, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அல்லும், பகலும் அயராமல் உழைத்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு முக்கிய குழுவாக செயல்பட்டு வருகின்றது. இக்குழு பொதுமக்களை நேரடியாக சென்று, அவர்களை சந்தித்து, அவர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக செயலாற்றி வருகின்றது. பொதுமக்களின் மனுக்கள் மீது அக்கோரிக்கை சார்ந்த துறை அலுவலர்கள் பதிலளிக்கும் போது, உரிய முறையில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, தகுந்த ஆதாரத்துடன் பதிலளிக்க வேண்டும்.
தருமபுரி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பாக செயலாற்றி வருகின்றது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழுவானது இன்றைய தினம் தருமபுரி மாவட்டத்திற்கு வருகைதந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்திற்கு ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மனுதாரர்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காலை முதல் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று தேர்வு செய்யப்பட்ட மனுதாரர்கள் முன்னிலையில் அவர்களின் கோரிக்கை மனுக்கள் மீதான துறை அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவிற்கு, தருமபுரி மாவட்டத்திலிருந்து ஏற்கனவே வரப்பெற்ற 108 மனுக்களில் 26 மனுக்கள் முடிக்கப்பட்டு, 82 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 78 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்கள் முன்னிலையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவிற்கு பல்வேறு மனுதாரர்கள் அளித்துள்ள மனுக்கள் மக்களின் நலன்சார்ந்த மனுக்களாக இருக்கின்றது. அத்தகைய மனுக்கள் மீது அந்தந்த துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, அம்மனுதாரர்களை நேரில் சந்தித்து அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேர்வுகள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றிட துறை அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மாண்புமிகு மனுக்கள் குழுவின் தலைவர் / அரசு தலைமைக் கொறடா / திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர். கோவி. செழியன் அவர்கள் தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து, இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழுவிற்கு தருமபுரி வட்டம், அதகப்பாடியைச் சேர்ந்த 28 மனுக்கள் வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில் அம்மனுக்கள் மீது உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் தகுதியான 15 பயனாளிகளுக்கு ரூ.6,75,000/- மதிப்பீட்டிலான 15 இலவச வீட்டுமனைப்பட்டாக்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மாண்புமிகு மனுக்கள் குழுவின் தலைவர் / அரசு தலைமைக் கொறடா / திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர். கோவி. செழியன் அவர்கள் வழங்கினார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி.வெ. தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட வன அலுவலர் திரு.கே.வி.அப்பால நாயுடு இவப., தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் திருமதி.இரா.சாந்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பு செயலாளர் திரு.மு.மோகன் ராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.ம.யசோதா, தருமபுரி நகராட்சி நகர்மன்றத் தலைவர் திருமதி.மா.இலட்சுமி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மனுதாரர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக