பென்னாகரம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தைகள் தின விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 நவம்பர், 2022

பென்னாகரம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தைகள் தின விழா.

பென்னாகரம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 21-11-2022 குழந்தைகள் தின விழாவானது சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்சில் முனைவர்.கோ.வெங்கடாசலம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முதல்வர் முனைவர். J.பாக்கியமணி அவர்கள் தலைமை தாங்கினார். 

இந்நிகழ்ச்சிற்கு உயர்திரு ஜி.கே.மணி, சட்டமன்ற உறுப்பினர், பென்னாகரம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எனது வருங்கால கனவு எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதை மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களிக்கு பரிசளித்து பாராட்டிப் பேசினார். கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கினார், விழாவின் இறுதியில் ந.அசோக்குமார் அவர்கள் நன்றியுறை ஆற்றினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad