தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பெருந்திருவிழா நடத்தப்பட்டது. இதில் 33 வகை சுற்றுச்சூழல் மற்றும் மரபு சார்ந்த 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடப்பட்டன. இதில் காரிமங்கலம் வட்டாட்சியர் திரு சுகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக இந்நிகழ்விற்கு ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வை இயற்கையைக் காப்போம் தலைமையகம், தருமபுரி, தருமம் அறக்கட்டளை, தருமபுரி, டாக்டர். கலாம் பசுமை நல அறக்கட்டளை, சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை ஆகிய அறக்கட்டளைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னின்று நடத்தினர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான முனைவர் சி கோவிந்தராஜ் அவர்களும் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கர்களும் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக