தருமபுரி மாவட்டத்தில் 6,25,692 ஆண்கள் 6,11,258 பெண்கள் மற்றும் 176 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 12,37,126 வாக்காளர்கள் உள்ளனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 நவம்பர், 2022

தருமபுரி மாவட்டத்தில் 6,25,692 ஆண்கள் 6,11,258 பெண்கள் மற்றும் 176 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 12,37,126 வாக்காளர்கள் உள்ளனர்.


இந்திய தேர்தல் ஆணையத்தில் உத்தரவின்படி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2023, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (09.11.2022) வெளியிட்டார்கள். 

பின்னர் இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2023, வரைவு வாக்காளர் பட்டியல்அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல்-2023-ன்படி 57-பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,18,950 ஆண் வாக்காளர்களும், 1,16,541 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,35,508 வாக்காளர்களும், 58- பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 1,25,456 ஆண் வாக்காளர்களும், 1,17,213 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலின என மொத்தம் 2,42,688 வாக்காளர்களும், 59- தருமபுரி சட்டமன்ற தொகுதியில் 1,30,747 ஆண் வாக்காளர்களும், 1,28,251 பெண் வாக்காளர்களும், 112 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,59,110 வாக்காளர்களும், 60- பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 1,28,362 ஆண் வாக்காளர்களும், 1,27,603 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,55,978 வாக்காளர்களும், 61- அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,22,168 ஆண் வாக்காளர்களும், 1,21,650 பெண் வாக்காளர்களும், 24 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,43,842 வாக்காளர்களும் என மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,25,692 ஆண் வாக்காளர்களும், 6,11,258 பெண் வாக்காளர்களும், 176 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 12,37,126 வாக்காளர்கள் உள்ளனர். 


மேலும், தருமபுரி மாவட்டத்தில் 1,485 வாக்குச் சாவடி நிலையங்கள் உள்ளன. 01.01.2023 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் வருகின்ற 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய 4 நாட்களில் நடைபெறவுள்ள தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

இந்த சிறப்பு முகாம்களில், தகுதியான நபர்கள் அனைவரும் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம்-6 பூர்த்தி செய்தும், ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றச்செய்ய விரும்பினால், அதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6B-யை பூர்த்தி செய்தும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வழங்கலாம்.


மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே இணையதளம் மூலம் விண்ணப்பிக்க www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, கூடுதல் விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.


எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியல்-2023 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை உரிய படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு இணைத்து விண்ணபிக்கலாம் அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரி மூலமாகவும் விண்ணபிக்கலாம். என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2023, வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இவ்விழிப்புணர்வு பேரணியில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 100- க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். 


இவ்விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக இலக்கியம்பட்டி வரை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா சுகுமார், தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.பி.கே.கிள்ளிவளவன், மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.எச்.சௌகத்அலி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad