தருமபுரி மாவட்டம் வறட்சியான மாவட்டம் விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும் போதிய பருவ மழை பெய்யாததால் இப்பகுதியில் உள்ள ஏரிகள் முழுவதும் வறண்டே காணப்படும். இதனை போக்கும் வண்ணமாக பஞ்சபள்ளி அணையில் இருந்து பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள 17 ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கப்பட்டது.

பஞ்சப்பள்ளி அணை நிரம்பியதின் காரணமாக உபரி நீரை பாரப்பட்டி பகுதியில் உள்ள 17 ஏரிகளுக்கு திறந்து விடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இன்று பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி முழுவதும் நிரம்பியது வழிந்தது.இதனை இக்கிராம மக்கள் இனிப்புகள் வழங்கியும் ஆடு பலியிட்டு அதனை சமைத்து கிராம மக்கள் அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் பால்வளத் தலைவர் டி.ஆர். அன்பழகன் மாவட்ட கவுன்சிலர் குட்டி மற்றும் சுந்தரம் அப்புசாமி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக