தர்மபுரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான சூப்பர் சீனியர் நீச்சல் போட்டியில் தருண் சிங், மோகன்பாலாஜி, தீபக்ராஜ், பூபதி மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கான சீனியர்நீச்சல் பிரிவில் சச்சின், கார்த்திக், உதய தாவீத், அபிஷேக் மற்றும் 14 வயதுக்குட்போட்டுருக்கான ஜூனியர் பிரிவில் சஞ்சய் வருண்ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். இவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

தடகளப் பிரிவில் தருண் சிங், அப்ராட் அகமத், தருமன், கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.இரட்டையர்களுக்கான இறகு பந்து போட்டியில் அப்ராட் அகமத், அன்பரசு ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள் நாமக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.கேரம் பிரிவில் யோபு,சஞ்சய் ஆகிய மாணவர்கள் முதலிடம் பெற்றனர் இவர்கள் அரியலூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு கொள்கின்றனர்.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்களையும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வீரன், மகேந்திரன், கண்ணன் ஆகியோரையும் பொறுப்பு தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, மூத்த ஆசிரியர் முனியப்பன், உதவி தலைமை ஆசிரியர்கள் லட்சுமணன், லில்லி மற்றும் ஆசிரியர்கள் கல்வி குழு தலைவர், மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக