தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (21.11.2022) நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 475 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கடந்த 14.11.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்களிடம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடகத்தூர் உள்வட்டம், தாளநத்தம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 4 பெண்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார்கள். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டாட்சியரிடம் வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி, இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தகுதியின் அடிப்படையில் இன்றைய தினம் நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடகத்தூர் உள்வட்டம், தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்களுக்கும் ரூ.2.23 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் வழங்கினார்கள். இந்த இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்றுகொண்ட ஆதிதிராவிடர் இன மக்கள் தங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுனை பட்டாக்கள் வழங்கிட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் எனவும், நாங்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை வழங்கிய 7 நாட்களுக்குள்ளாகவே, இக்குறுகிய காலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
மேலும், இன்று நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தருமபுரி வட்டம், வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த திருமதி.பி.செல்வி மற்றும் மூக்கனூரைச் சேர்ந்த திருமதி.ராஜாத்தி ஆகிய இருவருக்கும் ரூ.1.00 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்கள். கடந்த 14.11.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்களிடம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான திரு.சிங்கரஅழகன், தருமபுரி மாவட்டம், மணியம்பாடியைச் சேர்ந்த உழைக்கும் திறனற்ற நிலையில் இருக்கும் திருமதி.சந்திரா அவர்களும் தங்களுக்கு உதவித்தொகை வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார்கள்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரிய அலுவலர்களிடம் வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி, இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தகுதியின் அடிப்படையில் இன்றைய தினம் நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 2 பயனாளிகளுக்கும் மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும் மற்றும் கடகத்தூரைச் சேர்ந்த திருநங்கை சரஸ்வதி என்பவருக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இன்று நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரிந்து பணியிடையில் மரணமடைந்த ஆர். பன்னீர்செல்வம் என்பவரின் வாரிசுதாரரான அவரது மகன் திரு.பி.வினோத் அவர்களுக்கும், தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரிந்து பணியிடையில் மரணமடைந்த எஸ்.சிவப்பிரகாசம் என்பவரின் வாரிசுதாரரான அவரது மகன் திரு.எஸ்.ஜீவபாரதி அவர்களுக்கும், தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவு ஆணைகளை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் கடந்த 27.09.2022 அன்று நடைபெற்ற கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தமிழகத்தில் கிராம சபைகளை வலுப்படுத்துதல் குறித்த கருத்தரங்கில் தருமபுரி மாவட்டத்திலிருந்து பங்கேற்ற நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், சிவாடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆர்.ஆறுமுகம் அவர்களுக்கும், அரூர் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தமலை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.எஸ்.கலைவாணி அவர்களுக்கும் மற்றும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், இராமியனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.எம்.ராஜா அவர்களுக்கும் சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அரசு முதன்மை செயலாளரிடமிருந்து வரப்பெற்ற நற்சான்றிதழ்களை வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் மொத்தம் 14 நபர்களுக்கு ரூ.3.59 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகள், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை மற்றும் கருத்தரங்கில் பங்கேற்ற ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, திட்ட இயக்குநர் பழங்குடியினர் நலன் திரு.யு.ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.மரியம் ரெஜினா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமதி.அ.மாலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக