பொம்மிடி அருகே சிறுசிறு பாக்கெட்டுகளில் கஞ்சா எடுத்து வந்து விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது, தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் கஞ்சா தடுப்பு பிரிவு அதிகாரியான சக்திவேல் தலைமையிலான போலீசார் பொம்மிடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சுரக்காய்பட்டி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர், அப்போது சந்தேகத்துக்கு இடமான ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவரது கை பையில் சிறு சிறு 15 கிராம் கொண்ட 15 பாக்கெட்டுகள் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், பொம்மிடி அருகே உள்ள திப்பிரெட்டி அள்ளி பகுதியை சார்ந்த மாணிக்கம் என்பவரது மகன் பெரியசாமி 45 ராமதாஸ் நகர் பகுதியை சார்ந்தவர் என்பது தெரிய வந்தது, இதன் பேரில் இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக