தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (44) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியில் 13 வயது சிறுவனுடன் ஓரின சேர்க்கைக்காக தகாத முறையில் நடந்து கொண்டதால் சிறுவனின் தாயார் மகேந்திர மங்கலம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் கணேசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் நிலையில் கணேசன் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரிடத்தில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்ப பெற சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், இதில் சிறுவனின் தாயார் சமாதான பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொள்ளாததால் சிறை தண்டனைக்கு பயந்து கணேசன் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது சுமார் 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த மகேந்திரமங்கலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக