பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ காணியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 மார்ச், 2022

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ காணியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ காணியம்மன் திருக்கோவில் புதுப்பித்து 12 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீகாணியம்மன்  கோயில் 12 ஆம் ஆண்டு  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவில் புதுப்பிப்பு பணிகள் முடிந்து, கடந்த 23ஆம் தேதி கும்பாபிஷேக கால்கோள்  நாட்டப்பட்டது. இதனையடுத்து 11, 12, 13 ஆம் தேதி தினமும் மகா கணபதி, ஹோமம் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம் உள்ளிட்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை  கால யாக பூஜைகள் மங்கள இசையுடன் தொடங்கியது.

இதனையடுத்து இன்று மகா கும்பாபிஷேக விழாவில், காலை நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் வேதபாராயணம், மூலமந்திர ஹோமம்,  மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோபுர கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்து, சாமி தரிசனம் செய்தனர். 

இதனை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்ட புனித தீர்த்தம் பொதுமக்களுக்கு தொளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.