பாலக்கோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்த நாள் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 மார்ச், 2022

பாலக்கோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்த நாள் விழா.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திமுக ஒன்றிய கழக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் குட்டி தலைமையில் எர்ரனஅள்ளி, பி.கொல்லஅள்ளி, தளவாய்அள்ளி, புதூர், சுகர்மில், மேல்தெரு, தக்காளிமண்டி, வாழைத்தோட்டம், உள்ளிட்ட நகர கிராம பகுதிகளில் கழக கொடி ஏற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்யில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அழகு சிங்கம், முத்துசாமி, ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தன், குட்டி (எ) முனிராஜ், மாவட்ட கவுண்சிலர் கந்தசாமி, மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் ரவி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், துணை செயலாளர் முனியப்பன், துனை பொருளார் ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி குமரேசன் மற்றும் நிர்வாகிகள் இருசன், தருமன், ஜீவா கிருஷ்னன் முருகன் விஜயகுமார் வார்டு உறுப்பினர்கள் லட்சுமி ராஜசேகர், தீபா சரவணன் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad