தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான ஒகேனக்கல் பரிசல் துறை ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
சுற்றுலாபயணிகளிடம் சுங்கத்துறை சார்பில் பென்னாகரம். பி. டி ஓ .ஆபீஸ் யில் ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த முறை பரிசல் துறை மட்டும் ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் டோல்கேட் 82 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. தற்பொழுது கரோனா வைரஸ் காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பரிசல் துறையில் ஏலம் விடாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்பொழுது பரிசல் துறை மட்டும் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் பொது ஏலம் விடப்பட்டுள்ளது. இதேபோல் டோல்கேட் ஏலம் ரூபாய் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முப்பத்தி ஆறு லட்ச ரூபாய் அதிகமாக ஏலம் விடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக