இந்நிலையில் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று, 7.3.2022 முதல் 6.3.2023 வரைக்குமான ஒட்டனூர் கோட்டையூர் பரிசல் துறை ஏலம் நடைபெற்றது.
ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் தலைமையில் ஏலம் நடைபெற்றது. ஏரியூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
19 பேர் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர், பொது ஏல முறையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், சேலம் மாவட்டம் வெடிகாரனூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், 17 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
கடந்த ஆண்டு 40 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன இந்த பரிசல் துறை, இந்த ஆண்டு மிகக்குறைந்த விலைக்கு ஏலம் போயுள்ளது. ஒப்பந்த தாரர்கள் கூட்டுசேர்ந்து கொண்டு வெளி ஏலம் நடத்தியதன் காரணமாக அரசுக்கு சுமார் இருபத்தி மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏலத் தொகையை விட 50 சதவீதத்திற்கும் குறைவான தொகைக்கு, இந்த ஆண்டு ஏலம் போய் உள்ளதால், மறு ஏலம் நடத்தப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக