ஒகேனக்கல் அருகே ஊட்டமலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் சார்பாக வரும் முன் காப்போம் திட்டம் பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜிகே மணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த சிறப்பு முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல் கண்பார்வை பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனை என அனைத்து விதமான பரிசோதனைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்தர்பாபு, மாவட்ட கவுன்சிலர் C.V மாது ,பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வகுமார் , பாட்டாளி இளைஞர் சங்க சத்தியமூர்த்தி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், மற்றும் கூத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர், தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் , பள்ளி தலைமையாசிரியர் கூத்தரசன் பங்கேற்று முகாமை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக