நேரு யுவ கேந்திராவின் சார்பில் விளையாட்டு போட்டிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 பிப்ரவரி, 2022

நேரு யுவ கேந்திராவின் சார்பில் விளையாட்டு போட்டிகள்.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் இன்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இலக்கியம் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது.

கபடி, கைப்பந்து, குழு விளையாட்டு போட்டிகள் மற்றும் 100,200மீட்டர் ஓட்டம், குண்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன, போட்டிகளை தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம்பரத் முன்னிலையில் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் தருமபுரி சட்டமன்ற மன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்.

நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை செந்தமிழ் செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருணாநிதி, அரசு விடுதி இயக்குநர் பாலகிருஷ்ணன், முதுநிலை ஆசிரியர் புகழேந்தி உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் மாது, தேவேந்திரன் நடுவர்களாக இருந்து செயல்பட்டனர்.

நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் முனியப்பன், ஜெய்கணேஷ், அரிபிரசாந்த், சேதுபதி, ஞானராஜ், விக்னேஷ் ஆகியோர் விளையாட்டு போட்டிகள் நடத்த ஒத்துழைப்பு நல்கினர். நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் கபில்தேவ் நன்றியுரை நிகழ்த்தினர்.


கருத்துகள் இல்லை:

Post Top Ad