தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில், ஏ,ஜெட்டிஅள்ளி திட்டப்பகுதி மற்றும் பாலக்கோடு திட்டப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டு மீதமுள்ள வீடுகள் / மனைகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதி-7-ல் 440 குறைந்த வருவாய் பிரிவு 7 பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு (ப 7 84/8), ஒசூர் பகுதி-16-ல் உயர் வருவாய் பிரிவு மற்றும் மத்திய வருவாய் பிரிவினருகளுக்கான (6 & 146) அடுக்குமாடி குடியிருப்புகள், (தற்காலிக விலை) 01.03.2022 முதல் "முதலில் வருவோருக்கு முன்னுரிமை" என்ற அடிப்படையில், உள்ளது உள்ள நிலையில் விற்பனை செய்யப்படஉள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு காலி விபர அறிக்கை www.tnhb.tn.gov.in என்றஇ ணையதள முகவரியில் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் காணலாம்.
ஒதுக்கீடு பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், வீடு கோரும் மனுவுடன் வீட்டிற்குண்டான முழு தொகைக்கான வரைவு காசோலை இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக