அரசு மேல்நிலைப்பள்ளி வே முத்தம்பட்டி பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களின் கற்பித்தல் உபகரணங்கள் கண்காட்சி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் தர்மபுரி ஒன்றியம் வே.முத்தம்பட்டி குறுவளமையத்திற்குட்பட்ட குடியிருப்புகளில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களின் தன்னார்வலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி இன்று 25.02.2022 அரசு மேல்நிலைப்பள்ளி வே.முத்தம்பட்டி பள்ளியில் நடைபெற்றது.
இதில் 38 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர் அருண்குமார் மற்றும் சிக்கம்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முனிராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.
பயிற்சியின் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் செய்த கற்பித்தல் உபகரணங்கள் காட்சிப் படுத்தும் விதமாக கற்பித்தல் உபகரணங்கள் கண்காட்சி நடைபெற்றது இக்கண்காட்சியை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமுகம் திறந்து வைத்து தன்னார்வலர்கள் மாணவர்களின் புரிதலை மேம்படுத்தும் விதமாக செய்திருந்த கற்றல் கற்பித்தல் உபகரணங்களை பார்வையிட்டார். இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவி ஆசிரியர் செல்வகுமார் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக