நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க. 13 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்.றுள்ளனர். இதன்மூலம் தருமபுரி நகராட்சி தி.மு.க. கைப் பற்றி உள்ளது.இதன் மூலம் கடந்த 20 ஆண்டு களுக்கு பிறகு தருமபுரி நகராட்சியை தி.மு.க. கைப் பற்றியுள்ளது.
இதையடுத்து மார்ச் 2-ந் தேதி வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடக்கிறது. இதன்பிறகு மார்ச் 4-ந் தேதி நகராட்சியின் தலைவர் பதவிக்காக தேர்தல் நடக்கிறது.
நகராட்சி தலைவர் யார்?
இதனால் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்று வதில் தி.மு.க. நிர்வாகிகள் இடையே முட்டலும் மோதலும் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி நகராட்சியில் 29-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் நித்யா வெற்றி பெற்றுள்ளார். இவர் நகர தி.மு.க. பொறுப்பாளரான அன்பு வின் மனைவி ஆவார். நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் நித்யா பெயர் அடிபட்டு வருகிறது. இதேபோல் 25-வது வார்டில் வெற்றிபெற்ற முல்லைவேந்தன் மனைவி சத்யா, 20-வது வார்டில் வெற்றி பெற்ற சுருளி மனைவி செல்வி, 27-வது வார்டில் வெற்றி பெற்ற நாட்டான் மாது மனைவி லட்சுமி ஆகியோரது பெயரும் அடிபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த 4 பேரும் மட்டுமே தருமபுரி நகராட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் தலைவர் பதவியை கைப்பற்றலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள் ரகசியமாக ‘காய்’களை நகர்த்தி வருவது தருமபுரி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நித்யா அன்புக்கு வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர், எப்படி இருப்பினும் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்த பிறகே, நிலவரம் தெரிய வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக