சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 பிப்ரவரி, 2022

சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி.

பென்னாகரத்தை அடுத்துள்ள  சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமையில் நடைபெற்றது. 

எட்டிக்குட்டை அரசு உயர்நிலைப்பள்ளியும் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி 6, 7, 8 ம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா ஐந்து மாணவர்கள் என்ற வீதம் 15 மாணவர்களுக்கு வழிகாட்டு ஆசிரியர்கள் ஒருநாள் பயிற்சி அளித்தனர்.

இந்தப் பயிற்சியில் பள்ளியின் வளங்கள் கற்றல் செயல்பாடுகள், அவர்களின் ஆர்வம், கரோனா காலகட்டத்தில் மாணவர்களின் செயல்பாடு, விளையாட்டு, இணைய வழியில் இரண்டு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் என நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் மாதவன், ஆசிரியர்கள் மகேந்திரன், பிரகாஷ், திலகவதி சின்னப்பள்ளத்தூர் பள்ளியில் வழிகாட்டி ஆசிரியர்களாகவும், எட்டிகுட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமையில் வளர்மதி, பழனிசெல்வி வழிகாட்டி ஆசிரியர்களாகவும் செயல்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad