முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 பிப்ரவரி, 2022

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் கே. சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி .ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்று பேசினார்.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரை அச்சுறுத்தும் வகையில் தமிழக அரசு போடும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொண்ணுவேல், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், கோபால், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வராஜ், தனபால், அன்பு மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

Post Top Ad