பாப்பாரப்பட்டி பேரூராட்சி நகரப்பகுதி, தர்மபுரி ரோடு, பென்னாகரம்- பாலக்கோடு ரோடு வேலம்பட்டி, பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், சாலையோர பாஸ்ட் புட் கடைகள், தள்ளுவண்டி உணவு மற்றும் சில்லி சிக்கன், சில்லிமீன், பீப் மற்றும இறைச்சி ஸ்டால்களில் ஆய்வு செய்தார். உணவகங்களில் சுற்றுப்புற சுகாதாரம், சமையலறை சுத்தம், ஸடோர் ரூம், டைனிங்ஹால் உள்ளிட்ட இடங்கள் சுத்தம் சுகாதாரமாகவும் ஈ, கரப்பான்,பூச்சிகள் பல்லி, எலி போன்றவை அண்டாமல் தடுப்பு நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும். பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிப்புடன் உரிய கவச உடைகள் மேலங்கி, தலையுறை, கையுறை , முககவசம் மற்றும் இரு தவணை கரோனா தடுப்பூசி போட்டிருத்தலை உறுதிப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
சமையலுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரும் ,கழிவு பொருட்கள் கழிவு முறையாக வெளியேற்றப்படவேண்டும் குடிநீர் கலன்கள், நிலைகள் மற்றும் தயாரித்த உணவுகள் மூடிய நிலையில் பராமரிக்கவும் உணவு பாதுகாப்பு உரிமம் கண்டிப்பாக பெற்று இருத்தலுடன் முறையாக புதுப்பித்து பார்வையில் படுமாறு மாட்டிவைக்க வேண்டும் . உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். மளிகை பொருட்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் மசாலாபொருள்கள் லேபிள் நடைமுறை பின்பற்ற வேண்டும் என எச்சரித்தார்.
ஒரிரு பாஸ்ட் புட் மற்றும் உணவகங்களில் செயற்கை நிறமூட்டி பாக்கட்கள் , உரிய முகவரி, தயாரிப்பு தேதியில்லாத மசாலா தூள் பாக்கட்கள் பறிமுதல் செயது அழிக்கப்பட்டது. குடிநீர் கேன்கள் உரியதேதி இல்லாதவை அகற்றபட்டது. நாள்பட்ட பழைய எண்ணெய் ஒரு துரித உணவு கடையில் பறிமுதல் செய்து முறையாக அப்புறப்படுத்தினார். இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் நடைமுறை பின்பற்ற வில்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.பானுசுஜாதா அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக