கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவுப்படி ,சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர். கோவிந்தன் வழிகாட்டுதலில்,தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தொழுநோய் என்ற வியாதியும் அனைத்து வியாதிகளைப் போல் ஒரு கிருமியால் வருவதே. ஆகையால் தொழு நோயாளிகளை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து புறம் தள்ளாமல் அவர்களை அரவணைத்து அனைவரும் செல்ல வேண்டுமாய் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மட்டுமின்றி ஆரம்பநிலை நோயாளிகளுக்கு சிகிச்சை முழுவதுமாக அளித்து அவர்களை ஊனத்திலிருந்து தடுக்க அனைத்து முயற்சிகளையும்அனைவரும் எடுக்க வேண்டுமாய் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.சாதி மத இன மொழி பேதமின்றி அனைவரும் சமூக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமாயும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட நலக் கல்வியாளர் எம் .சப்தமோகன் அவர்கள் தலைமையிலும்,மருத்துவ அலுவலர் ஷோபாப்பிரியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாமணி,மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர்கள் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் தினேஷ்குமார், வினோத்குமார் கவியரசன், அறிவழகன், ஜெய முருகேஷ், பாலா, குறளரசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
அதியமான் வேளாண்மை கல்லூரியின் முதல்வர் டாக்டர்.விஜயராகவன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். அக்கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் என்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் ஹரிஷ் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
உறுதிமொழியை சுகாதார ஆய்வாளர் வினோத் குமார் அவர்கள் வாசிக்க அனைவரும் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்டநலக் கல்வியாளர் சப்தமோகன் அவர்கள் கொரோனா விதிமுறைகளை எப்படி கடைப்பிடிப்பது, கொரானா வராமல் எப்படி தடுத்துக் கொள்வது தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
டெங்கு குறித்த விழிப்புணர்வுப்பற்றி சூளகிரி சுகாதார ஆய்வாளர் தினேஷ் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக