நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பு அதிகாரி ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 பிப்ரவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பு அதிகாரி ஆய்வு.

பென்னாகரம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி தோ்தல் குறித்து மேலிட சிறப்பு அதிகாரி பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று  கடைசி நாள் என்பதால் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளா்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இந்த நிலையில் நகா்ப்புற தோ்தல் சிறப்பு அதிகாரி பிருந்தாதேவி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் விவரம், வேட்புமனுக்களின் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, பதற்றமான வாக்குச் சாவடிகள், வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரின் எண்ணிக்கை குறித்து பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கீதா ( பென்னாகரம்), கோமதி (பாப்பாரப்பட்டி), வட்டார சுகாதார ஆய்வாளா் மனோஜ் குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad