தருமபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட நாசன்கொட்டாய் பகுதியை சேர்ந்த தமிழ்க்குமரன் மகள் கவிநிலவு, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, ரேகடஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்த அன்பழகன் மகன் ஜெயக்குமார், தருமபுரி இலக்கியம்பட்டியைச் சேர்ந்த மாதையன் மகன் லோகரசன் ஆகிய மூவரும், உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். தற்போது, உக்ரைன், ரஷியா இடையே நடைபெற்று வரும் போரால், உக்ரைன் நாட்டில் உள்ள தமிழக மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மருத்துவ மாணவர்களையும் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் சார்பில், மாநிலத் தொடர்பு அதிகாரி ஜெசிந்தா லாசரஸ்-க்கு நேற்று அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக