பாதி இடிந்த நிலையில் பள்ளி சுற்று சுவர் கட்டிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

பாதி இடிந்த நிலையில் பள்ளி சுற்று சுவர் கட்டிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சித்திரப்பட்டி கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 

கடந்த 2 மாதத்திற்கு முன்பு மழையினால் பள்ளியின் சுற்றுசுவர் கட்டிடம்  பாதி இடிந்து விழுந்தது.  இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் பள்ளியின் உள்ளே புகுந்து பள்ளி வளாகத்தில் மது அருந்த்தியும், உடல் உபாதைகள் கழித்தும் பள்ளி வளாகத்தை நாசம் செய்து வருகின்றனர், மேலும் மாணவர்கள் பள்ளி முடிந்ததும் சுற்றுசுவர் அருகே விளையாடி வருகின்றனர் இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே எந்த ஒரு  அசம்பாவிதமும் ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக  உரிய நடவடிக்கை மேற்கொண்டு பள்ளிக்கு சுற்று சுவர் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad