பென்னாகரம் பேரூராட்சியில் திமுக, அதிமுக, பாமக சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் மொத்தமாக 112 வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி 18 வாா்டுகளைக் கொண்டது. திமுக, அதிமுக, பாமக,சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளா் பட்டியலை அறிவித்துள்ளது.
இதில் பாமக, பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. பென்னாகரம் பேரூராட்சியில் திமுக-21 பாமக -21 அதிமுக-26 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -6 மக்கள் நீதி மய்யம்-2 பாஜக-7 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி-1 தேமுதிக -6 அமமுக -1 சுயேச்சைகள் 21 போ் என மொத்தம் 112 வேட்பாளா்கள் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனுதாக்கல் செய்தனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக