தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் உள்ள கிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் வந்து போலியோ சொட்டு மருந்து போட்டு சென்றனர்.
மேலும் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஜெயச்சந்திரபாபு அவர்கள் துவங்கி வைத்தார்.
முகாமில் நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.உமாமகேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் மதியழகன், சிலம்பரசன் மற்றும் பென்னாகரம் பேரூராட்சி பணியாளர்கள், சிவசக்தி நர்ஸிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக