தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்/தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர். ஆர். பிருந்தா தேவி இஆப., அவர்களை அவரது முகாம் அலுவலகமான தருமபுரி பயணியர் மாளிகை (Circuit House) அறை எண் 02-ல் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை நேரிலும், 9342429860 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., இ.ஆ.ப., அவர்கள் தகவல் இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19.02.2022 புதன்கிழமை அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கு தருமபுரி மாவட்ட தேர்தல் பார்வையாளராக (Election Observer) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர். ஆர். பிருந்தா தேவி இஆப., அவர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர் (Election Observer) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தா தேவி இஆப., அவர்கள் தருமபுரி பயணியர் மாளிகையில் (Circuit House) முகாமிட்டு தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிக்கின்றார்கள்.
எனவே நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல், 2022 தொடர்பாக தேர்தல் பார்வையாளரை அவரது முகாம் அலுவலகமான தருமபுரி பயணியர் மாளிகையில் (Circuit House) அறை எண்-2-ல் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை (1 மணி நேரம்) நேரிலும், 9342429860 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக