ஊர் திருவிழா ஆலோசனை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 பிப்ரவரி, 2022

ஊர் திருவிழா ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பஸ்தலப்பள்ளி அருகே அமைந்துள்ள அங்குசகிரி திம்மராயசுவாமி (பெருமாள்) கோவில்  புகழ்பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது.

மேலும் வருடா வருடம் நடைப்பெறும் திருவிழாவில் தமிழ்நாடு , ஆந்திர , கர்நாடக மாநிலங்களில் இருந்து பல இலட்சம் பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

மேலும் பல இலட்சம் பக்தர்களுடன் நடைப்பெறும்  ஸ்ரீதேவி , பூதேவி , மற்றும் திம்மராயசுவாமி கோவில்  தேர்திருவிழா வெகுவிமர்சமாக நடைப்பெறும்.

இந்நிலையில் கோவிலுக்கு வரும்  பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பும்  , தரிசனம்  மற்றும் அன்னதானம் சிறப்பு ஏற்பாடுகளும் செய்திட அறக்கட்டளை சார்பில் ஆலோசனையில் முன்வைக்கப்பட்டது.

மேலும் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அகில  இந்திய மகத்தோர் மக்கள் திம்மராயசுவாமி சேவா அறக்கட்டளை சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சேவா அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad