அரூர் வட்டம் கட்டரசம்பட்டியை சார்ந்த இராமகிருஷ்ணன் என்பவரின் மனைவி சபிதா (24) கடந்த 15.10.2021 தேதியில் அரூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்றார் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இரத்த கசிவு சீழ் வடிதல் என கடுமையான வலிஏற்ப்பட்டு கோபிநாதம்பட்டி, ஊத்தங்கரை ஆகிய பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடையததால் தற்போது தருமபுரி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார் 4 மாத காலமாகியும் புண் சரியாகததால் மிகுந்த மன உளைச்சலில் சபிதா குடும்பத்தினர் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகளுடன் வரும் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது என செவிலியர்கள் மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர் கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பார்ப்பதற்கே மிகுந்த பயமாக உள்ளது என்று கூறுகின்றனர் இது மட்டுமல்லாமல் இதே ஊரை சேர்ந்த சிவலட்சமி வேப்பம்பட்டியை சேர்ந்த தீபா பாப்பநாயக்கன்வலசை பெண் ஒருவருக்கும் இதே போல் தொடர் பிரச்சினை உள்ளதாக கூறுகின்றனர்.
தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்கி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக