கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பொதுமக்களின் பிரச்சினைகளை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாத வேப்பனப்பள்ளி ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தற்போது வேப்பனப்பள்ளி - குப்பம் சாலையில் நீண்ட நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளுடன் தேங்கி நிற்கும் கழிவு நீர், மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பல தரப்பட்ட காசநோய்களும், நோய்தொற்றுகளும் பரவ வாய்ப்புள்ளதாகவும், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க பல முறை அரசு அதிகாரிகளை அனுகினாலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி குடியிருப்பு வாசிகளும் பொதுமக்களும் வருத்தும் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொதுமக்களின் பிரச்சினைகளும் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகம் யாருக்காக செய்ல்படுகிறது என வேப்பனப்பள்ளி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக