நீட் தேர்வில் வெற்றி பெற்ற தருமபுரி மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 பிப்ரவரி, 2022

நீட் தேர்வில் வெற்றி பெற்ற தருமபுரி மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா.

நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று மாநில அளவில் தருமபுரி மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் அரசு பள்ளி யில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கீழ் 35 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர், இவர்களை பாராட்டும் விதமாக மை தருமபுரி சமூக அமைப்பு, ஓ2 கார்டன் ரெஸ்டாரன்ட், THIRD EYE STUDIOZ, PUROFLO அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினர். 

மாணவர்களுக்கு மருத்துவ கோட், ஸ்டெதஸ்கோப், கேடயம், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தங்கம் மருத்துவமனை மரு.இரா.செந்தில், அதியன் உணவகம், மற்றும் மை தருமபுரி ஆகியோர் இணைந்து இந்த விழாவினை ஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி மருத்துவ கல்லூரி டீன் மரு.அமுதவள்ளி, முதன்மை கல்வி அலுவலர் திரு.கணேஷ்மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.சண்முகவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வினோத், நீட் ஒருங்கிணைப்பாளர் திரு.வாசுதேவன்,  FUVISION INTERNATIONAL SOCIAL ACTIVITY CLUB நிர்வாகிகள் திரு.உதயக்குமார், திரு.பசல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இந்த பாராட்டு விழாவிற்கு மை தருமபுரி குடும்பத்தினர், ஓ2 நிர்வாகிகள் பிரபு, ஞானம்மொழி, PUROFLO மூர்த்தி ஆகியோர் விழாவை சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்தி முடித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad