நாக்பூரில் இருந்து காப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி ஒரு லாரி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஜங்ஷன் அருகே லாரி இன்று காலை 7.30 மணியளவில் சென்றது. லாரியை சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த செந்தில் (வயது 32) ஓட்டினார். மேலும் பூபதி (30) என்பவரும் உடன் இருந்தார்.
அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் லாரி, ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பூபதிக்கு கால் முறிவு ஏற்பட்டது. செந்தில்க்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தகடூர் குரல் நாவல்கள் படிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக