கிருஷ்ணகிரி பகுதியில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பலை கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்
இதையடுத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஜாஸ்ரீ சாய்சரண். மோசடி கும்பலிடம் கைப்பற்றப்பட்ட ஐந்து விலை உயர்ந்த கார்கள் 22- கைபேசிகள் 4-கோடியே 66-லட்ச ரூபாய் போலி ரூபாய் நோட்டுகள். ஆகியவற்றை பார்வையிட்டார்
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் தமிழகம் ஆந்திரம் கேரளம் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள நபர்கள் இந்த இரட்டிப்பு மோசடி ஈடுபட்டுள்ளதால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் 11 பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இது கைது செய்யப்பட்ட மோசடி கும்பல் பதினொரு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், பணம் இரட்டிப்பு மோசடி கும்பல் 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக