5வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 அக்டோபர், 2021

5வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஐந்தாவது மாபெரும் தடுப்பூசி முகாம்கள் தருமபுரி மாவட்டத்தில் 578 இடங்களில் நேற்று நடைபெற்றது.

இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு, தருமபுரி மாவட்டத்தை கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது மாபெரும் தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆப., அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தகவல்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது மாபெரும் தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் நேற்று (10.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட குப்பாண்டித் தெரு உருதுபள்ளி, பாபா தெரு, செட்டிக்கரை ஊராட்சி - ராஜாபேட்டை துவக்கப்பள்ளி, ஒடசல்பட்டி கூட்டுரோடு அங்கன்வாடி மையம், கோபிநாதம்பட்டி அங்கன்வாடி மையம், மொரப்பூர் பேருந்து நிலையம், வருணதீர்த்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெத்தூர் அங்கன்வாடி மையம், சந்தபட்டி அங்கன்வாடி மையம், பொம்மிடி பேருந்து நிலையம், கடத்தூர், பாகல்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அதியமான் கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்று வரும் ஐந்தாவது மாபெரும் தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2020 மார்ச் முதல் கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. முதல் அலை செப்டம்பர் - 2020 மற்றும் இரண்டாம் அலை மே -2021 ஆகிய மாதங்களில் மாவட்டத்தில் தீவிரமாக இருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து கொரோனா நோய் பாதிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.மேலும், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படி, தமிழகம் முழுவதும் 16.01.2021 அன்று முதல் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டு வந்தது. பின்பு படிப்படியாக அனைத்து முன் களப்பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

07.10.2021 வரை தருமபுரி மாவட்டத்தில் முதல் தவணை 7,08,262 பயனாளிகளுக்கும், இரண்டாம் தவணை 194758 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 9,03,020 தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு 379 முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷ்ல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகும், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவே, தருமபுரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவரும் கட்டாயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா நோய் பரவுவதை தடுக்கவும் மற்றும் மூன்றாம் அலை பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளவும் உதவும். 

கொரோனா மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்திட திட்டமிட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. 12.09.2021 அன்று 879 இடங்களில் நடந்த முதல் மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் 49,136 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 19.09.2021 அன்று இரண்டாம் கட்டமாக 215 இடங்களில் 22,097 பயனாளிகளுக்கும், மேலும், 26.09.2021 அன்று மூன்றாம் கட்டமாக இடங்களில் 50,594 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

கடந்த ஞாயிற்றுகிழமை(04.10.2021) நடந்த நான்காம் கட்ட தடுப்பூசி திருவிழாவில் 380 இடங்களில் 35,376 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 59 சதவீதத்திற்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று  (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் கட்டமாக 578 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் வட்டார அளவிலான துணை ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தும் பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் 50 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களிலும் விடுபட்ட பயனாளிகள், முன்களப்பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்ற அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், கோவில் மற்றும் சுற்றுலா தல ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். 

மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்றை ஒழிக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது மாபெரும் இச்சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு காலை முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சவுண்டம்மாள், வருவாய் வட்டாட்சியர்கள் திரு.இராஜராஜன் (தருமபுரி), திருமதி.கனிமொழி (அரூர்), திருமதி.பார்வதி (பாப்பிரெட்டிப்பட்டி), அரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தனபால், திரு.ஜெயராமன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.சரஸ்குமார், மரு.தொல்காப்பியன், மரு.வாசுதேவன் உட்பட தொடர்புடைய  அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad