நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவனின் உடல் இன்று கண்டெடுப்பு. பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவருடைய மகன் ஸ்டான்லி நேற்று தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அவரது நண்பர் திருமணத்திற்கு நண்பர்களுடன் வந்திருந்தனர். திருமணம் முடிந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சின்னாறு கோத்திக்கல் என்ற பகுதியில் அவருடைய நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டதாக அவருடைய நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் நேற்று மாலை நேரம் வரை ஸ்டான்லியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று உடலை தேடும் பணி தொடங்கியபோது மணல்திட்டு பகுதியில் ஸ்டான்லியின் உடல் தண்ணீரில் மிதந்து இருப்பதாக அங்கிருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறை காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக