புரட்சிக்கவி பாரதியார் நூறாம் ஆண்டு நினைவஞ்சலி.
நமது புரட்சிக்கவி சுதந்திர போராட்ட வீரர் தெய்வீகப் பிறவி சி.சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நூறாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தர்மபுரி நகர் மகாத்மா காந்தி மணி மண்டபத்தில் பாரதி முத்தமிழ் மன்றம் தலைவர் திரு சுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாரதி முத்தமிழ் மன்றத்தின் கௌரவத் தலைவர் திரு.R. கருணாநிதி மற்றும் டாக்டர் வி பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தனர், செயலாளர் திரு ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
பாரதியார் படத்திற்கு பாரதமாதா ஆன்மீக சேவை மையத்தின் தலைவர் திரு B.N. குருராவ் அவர்கள் பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்தார்.
கம்பன் கழகத் துணைத் தலைவர் புலவர் பரமசிவம், தர்மபுரி மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் திரு நடராஜன், அன்னை கஸ்தூரிபாய் சேவா சங்க இணை செயலாளர் திரு சந்திரசேகர், மாநிலக்குழு நாகை பாலு, பாரதமாதா மக்கள் சிந்தனை குழு தலைவர் திரு. பிரதீப்குமார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் திரு வணங்காமுடி, சமூக சேவகர் அர்தனாரி, கவியரசு மன்ற செயலாளர் திரு பால முரளி, பாரத மக்கள் சிந்தனை பொருளாளர் திரு சந்திரமோகன், PRO திரு வினோத் பாரதி முத்தமிழ் மன்ற விஜயகுமார், திரு பாலசந்தர், திரு சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, சம்பத் குமார் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
பாரதி முத்தமிழ் மன்றத்தின் பொருளாளர் திரு தகடூர் வேணுகோபால் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக