மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி அதியமான் கோட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்கான திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி அதியமான் கோட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு இன்று (09.09.2021) நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையேற்று பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர்கள் பேசியதாவது:

குழந்தைகள் பாதுகாப்பு என்பது குழந்தை பிறந்த நாளிலிருந்து இளம் பருவம் அடையும் வரை அந்த குழந்தையின் குடும்ப உறவினை மேம்பட்ட நிலையில் ஏற்படுத்தி, குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல், சுரண்டல், ஒதுக்குதல், குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல் ஆகிய தீமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் அதற்கான அரசு சாரா சேவைகளை வகுத்து செயல்படுத்துதலாகும். குழந்தை பாதுகாப்பு குறித்த சேவைகள் சரியாக அமல்படுத்தப்படுகின்றனவா என மேற்பார்வையிட்டு ஆய்வு செய்திட வேண்டும். அது குறித்த பரிந்துரைகளை வழங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர்களை குழுத்தலைவராக கொண்டு செயல்படும். இத்தகு வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தை பாதுகாப்பு குறித்த சேவைகள் சரியாக அமல்படுத்தப்படுகின்றனவா மேற்பார்வையிட்டு ஆய்வு செய்திட வேண்டும். அது குறித்த பரிந்துரைகளை வழங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம தலைவரை குழுத்தலைவராக கொண்டு செயல்படும். இத்தகு கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. கிராம, ஒன்றிய, மாவட்ட, மாநில என நான் கடுக்கு முறை இருந்தால் தான் தமிழகத்தில் அனைத்து கிராமங்கள் முதல் பெருநாள் வரை உள்ள அனைத்து குழந்தைகள் சார்ந்த பிரச்சணைகளுக்கும் தீர்வுகண்டு அதன் மூலம் மாநில அளவில் அனைத்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும்.

வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் உறுப்பினராகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் செயலாளராகவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், உதவி தொடக்க கல்வி அலுவலர், ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அலுவலர், மூன்று கிராம் அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்கள், இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள், சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுவிலிருந்து மூன்று பேர் உறுப்பினர்களாக செயல்படுவர்.

குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக கிராம அளவிலும், வட்டார அளவிலும் குழந்தைகள் பாதுகாப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம், வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காலதாமதமின்றி கூட்டம் நடத்திட வேண்டும். கிராம, வட்டார அளவில் அவர்களுடைய அதிகார எல்லைக்குட்பட்டுள்ள

பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் இடை நிறுத்தம், குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், குழந்தை கடத்தல் போன்ற குழந்தைகள் தொடர்பான அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதித்து அவற்றிற்கு தீர்வுக்கான தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை களைவதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கிராம அளவில் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலாவிட்டால் அவற்றை வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவிற்கும், வட்டார அளவிலான குழுவில் அந்த பிரச்சனையை தீர்க்க இயலாவிட்டால் அவற்றை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.

கிராம, வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுடன் இணைந்து அந்தந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசால் செயல்படுத்தி வரும் குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சேவைகளை கிராம , வட்டார அளவில் இருக்கக் கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர்களாக ஆக்குவதற்கு வெளிமாநிலங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க கூடிய வகையில் அக்கிராம , வட்டார அளவில் அனைத்து குழந்தைகளின் கல்வி நிலை, இடை நிறுத்தம் உள்ளிட்ட அக்குழந்தைகள் தொடர்பான தரவுகள் கிராம அளவில் கிராம ஊராட்சி தலைவருக்கும், வட்டார அளவில் ஒன்றிய தலைவருக்கும் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த அலுவலகத்தில் இருக்கும் வண்ணம் செய்தல் வேண்டும்.

கிராம , வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த கிராம, வட்டார அளவில் செய்து தருவதற்கு இக்குழுக்கள் வழிவகை செய்தல் வேண்டும். கிராமங்களில், அந்த கிராமத்தை சாராத நபர்கள் நடமாடுவதைக் கண்டால் அதை பற்றி உடனடியாக விசாரித்து தேவைப்பட்டால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்க அந்தந்த குழுவின் தலைவர், உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் நலக்குழு, இளைஞர் நீதிக்குழுமம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட குழந்தைகள் தொடர்பான அமைப்புகள் மற்றும் துறைகள் குறித்த தொடர்பு எண்கள் அந்தந்த அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள், உளவியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் குழந்தைகள் என பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றி 24 மணி நேரமும் 1098 என்ற எண்ணை அழைத்து உதவி கோரலாம். தகவல் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராம , வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் தங்கள் கடைமைகளையும், பொறுப்புகளையும், உணர்ந்து செயல்பட்டால் நிச்சயமாக அந்தந்தப் பகுதிகளில் வாழும் குழந்தைகளின் நலன் பாதுகாக்கப்படும். எனவே அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி, இஆப., அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.எம்.சிவகாந்தி, மாவட்ட

சமூக பாதுகாப்புத் துறை நன்னடத்தை அலுவலர் திருமதி.எம். சௌதாமணி, பாதுகாப்பு அலுவலர் திருமதி .சி .சரவணா, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.பி.செந்தில் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad