தருமபுரி மாவட்டத்தில் வரும் 11.09.2021-ஆம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது - தருமபுரி, முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான திரு.மு.குணசேகரன் அவர்கள் தகவல்.
தருமபுரி மாவட்டத்தில் வரும் 11.09.2021-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த லோக் அதாலத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உதவியுடன் சமரசம் செய்ய கூடிய வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருதரப்பினருக்கும் சமரச முடிவு எடுக்கப்படும். இதன் படி மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு , காசோலை மோசடி, உரிமையியல், குடும்ப பிரச்சனை, சமரச குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். மேலும், வருகின்ற 11.09.2021-ஆம் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக தினசரி பிற்பகல், வழக்குகளை சமரசம் பேச வழக்கு சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடத்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய, மேற்கண்ட பிரிவு வழக்குகளில் பொது மக்கள் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். இவ்வாறு தருமபுரி, முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான திரு.மு.குணசேகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.