12.09.2021ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 வரை 850 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

12.09.2021ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 வரை 850 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா.

தருமபுரி மாவட்டத்தில்  வருகின்ற  12.09.2021ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 வரை 850 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா 
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2020 மார்ச் முதல் கரோனா நோய் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. முதல் அலை செப்டம்பர் 2020 மற்றும் இரண்டாம் அலை மே - 2021 ஆகிய மாதங்களில் மாவட்டத்தில் தீவிரமாக இருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து கொரோனா நோய் பாதிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷ்ல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகும், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவே, தருமபுரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவரும் கட்டாயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா நோய் பரவுவதை தடுக்கவும் மற்றும் மூன்றாம் அலை பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளவும் உதவும்.

ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) காலை 7 மணி முதல் மாலை 7 வரை   மாவட்டம் முழுவதும் 850 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது. எனவே 850 தடுப்பூசி மையங்களிலும் விடுபட்ட பயனாளிகள், முன்களப்பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்ற அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், கோவில் மற்றும் சுற்றுலா தல ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்றை ஒழிக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து கொரோனா நோய் இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad