மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்புச் சொற்பொழிவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்புச் சொற்பொழிவு.

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்புச் சொற்பொழிவு
சென்னை பாரதி கலைக்கழகம், மருதம் நெல்லி கல்வி குழுமம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தமிழ்த்துறை) இணைந்து மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் இணைய வழியில் சிறப்புச் சொற்பொழிவு 11.09.2021 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. 

இந்நிகழ்வில் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ச.சாலம்மாள் வரவேற்புரை வழங்குகிறார். 

ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் சி.காமராஜ் தலைமை வகிக்கிறார். 

சென்னை பாரதி கலைக் கழகத்தின் தலைவர் முனைவர் குமரிச் செழியன்  முன்னிலையுரை ஆற்றுகிறார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் க.ராஜா  வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். 

பாப்பாரப்பட்டி தமிழ்மகன் ப.இளங்கோ " அக்கினி குஞ்சு" என்ற தலைப்பிலும், பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் த.புனிதவள்ளி " எரிதழல் எங்கள் பாரதி" என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். 

ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கோ.ஷிலா நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். 

இவ்வாறு ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் நா.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad