150வது நாளில் மை தருமபுரியின் "பசிக்குதா வாங்க சாப்பிடுங்க".
மை தருமபுரி சமூக அமைப்பு சார்பாக ஏப்ரல் 14, 2021 தமிழ் புத்தாண்டு முதல் சாலையோர ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்க மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டம் தொடங்கப்பட்டது.
தருமபுரி மக்களின் பேராதரவுடன் இன்று 150 ஆவது நாள் விநாயகர் சதுர்த்தி அன்று கொண்டாடப்பட்டது. மக்களுக்கு மதிய உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது. தினமும் 50 நபர்களுக்கு மை தருமபுரி தன்னார்வலர்கள் மூலம் தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவு திட்டத்திற்கு ஆதரவு அளித்து வரும் நம் தருமபுரி மாவட்ட மக்களுக்கு மை தருமபுரி சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்றைய நிகழ்வில் மை தருமபுரி சதீஸ் குமார், தமிழ்செல்வன், அருணாச்சலம், தன்னார்வலர்கள் ஜாபர், ராகவன், தியாகவேந்தன், வெங்கடேஷ், தாரணி, வள்ளி, நிவேதா, கவிப்ரியா, சௌமியா ஆகியோர் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக