100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 செப்டம்பர், 2021

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி பஞ்சாயத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மூன்று இடங்களில் வேலைகள் நடைபெற்று வருகிறது. 

இதில் ஒரு பிரிவாக கூத்தப்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல் உள்ளிட்ட மூன்று கிராமத்தினர் உள்ளனர். குழுக்களில் உள்ள ஊட்டமலை, ஒகேனக்கல் கிராமத்தினருக்கு தொடர்ந்து, ஒரு வாரம் விட்டு, ஒரு வாரம் வேலை கிடைக்கின்றது. ஆனால், கூத்தப் பாடியை சேர்ந்த கிராமத்தினருக்கு, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே, ஒருவாரம் வேலை கிடைக்கிறது. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் பாஸ்கரிடம் கேட்டால் ஒகேனக்கல், ஊட்டமலை கிராமத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார். 

இதை கண்டித்தும், முறையாக அனைவருக்கும் வேலை வழஙக் கோரியும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று. முற்றுகையிட்டனர். இதையடுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது மக்களிடம் பேசிய அவர், அதிகாரிகளிடம் பேசி அனைவருக்கும் உரிய முறையில் வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad