தர்மபுரி மாவட்டம், அரூர்- மொரப்பூர் சாலையில் உள்ள அம்பேத்கர் அறக்கட்டளை கட்டிடத்தில் நேற்று டாஸ்மார்க் தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகளாக மாவட்ட அமைப்பாளராக விஜயராஜ், தலைவர் கதிரேசன், செயலாளர் அன்பரசன், பொருளாளர் ஜெயபிரகாஷ், செய்தி தொடர்பாளர் பரமசிவம், துணைத்தலைவர்கள் குமார், காளியப்பன், துணை செயலாளர்களாக கோதண்டராமன், குழந்தை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் 17 தேதியில் பிறந்த நாள் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Post Top Ad
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க பொறுப்பாளர்கள் அறிவிப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக