தீர்த்தமலையில் சுதந்திர தின விழா, ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தீர்த்தமலையில் சுதந்திர தின விழா, ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றினார்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை ஊராட்சியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி சரவணன் அவர்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தினர்.. காலை 8:30 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது.. காலை 9.00 மணியளவில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் 9:30 மணியளவில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தமயந்தி, ஊராட்சி செயலாளர் ரேணுகா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad